×

‘காபி வித் கலெக்டர்’ நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 18 பேர் பங்கேற்பு

விருதுநகர், ஜன. 9:  விருதுநகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்வில் முதல் வாரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் 18 பேர் பங்கேற்று கலெக்டருடன் கலந்துரையாடினர். விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன்கள் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக வாரம் ஒருமுறை கலெக்டரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்’  நிகழ்வு இந்த வாரம் முதல் துவங்கியது. முதல் வாரத்தில் நரிக்குடி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் படிப்பு, பேச்சு, விளையாட்டு, நடனம், ஓவியம் உள்ளிட்ட தனித்திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான 18 மாணவ, மாணவியர் விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது கலெக்டர் மாணவ, மாணவியரை பாராட்டி, மேலும் சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தினார்.

Tags : Coffee with Collector ,
× RELATED லட்சியத்துடன் வாழ்க்கையில் பயணித்தால் எந்த எல்லையையும் தொடமுடியும்